"கொடூர தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது" - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவீட்

மும்பை தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொடூர தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவீட்
x
மும்பை தாக்குதலை ஒருபோதும் மறக்க முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். அதில், பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்த நிலையில் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டு வீழ்த்த, அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் பிடிபட்டான். வழக்கு விசாரணைக்கு பிறகு 2012ம் ஆண்டு அஜ்மல் கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் பற்றி எரிந்த தாஜ் ஹோட்டலின்  புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், அந்த கோர சம்பவத்தை ஒருபோதும் மறக்க முடியாது என கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்