நாகையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதி

நாகையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், சௌந்தரராஜ பெருமாள் கோயிலை மழைநீர் சூழ்ந்துள்ளது..
நாகையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை - முழங்கால் அளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் பக்தர்கள் அவதி
x
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய மேலடுக்கு சுழற்சி காரணமாக நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்ததால், கடந்த 24 மணி நேரத்தில் நாகையில் 17 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இதனிடையே தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நாகை சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் மழைநீர் புகுந்தது. தெப்பக்குளத்தில் நிரப்பிய மழைநீரும், சாலையில் தேங்கிய மழை நீரும் சேர்ந்து கோவிலுக்குள் முழங்கால் அளவிற்கு புகுந்துள்ளது. கோவில் வளாகம், கொடிமரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் மழைநீர் வெளியேற வாய்ப்பில்லாமல் அங்கேயே தேங்கி நிற்கிறது. இதனிடையே இன்று காலை கோவிலை திறந்த சிவாச்சாரியார்களும் பக்தர்களும் கோவில் முழுவதும் நிரம்பிக் கிடந்த மழை நீரை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் அதனைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் முழங்காலளவு தண்ணீரில் நடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்து சென்றனர். கோவிலுக்குள் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை  துரிதப்படுத்த வேண்டும் என பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்