காதல் மனைவியை எரித்துக் கொன்ற காதலன்... மாமாவை தீர்த்துக்கட்ட அரிவாளுடன் விரட்டிய மச்சான்
பதிவு : நவம்பர் 25, 2021, 07:40 PM
மதுரையில் தன் சகோதரியை காதலித்து கர்ப்பிணியாக்கி பின்னர் அவரை கொடூரமாக எரித்துக் கொன்ற மாமாவை பழிதீர்க்க அரிவாளுடன் துரத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மதுரையில் தன் சகோதரியை காதலித்து கர்ப்பிணியாக்கி பின்னர் அவரை கொடூரமாக எரித்துக் கொன்ற மாமாவை பழிதீர்க்க அரிவாளுடன் துரத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். 

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்தவர் கிளாடிஸ்ராணி. 20 வயதான இவர் பெரியார் நகரை சேர்ந்த ஜோதிமணி என்பவரை காதலித்து வந்தார். இதனிடையே இருவரும் நெருங்கி பழகியதில், கிளாடிஸ் ராணி கர்ப்பமடைந்தார். 

ஆனால் காதலியை கழட்டிவிட திட்டமிட்டார் ஜோதிமணி. ஆனால் கிளாடிஸ்ராணி தன் காதலனை விடுவதாக இல்லை. பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு பெண் வீட்டார் கட்டாயப்படுத்தி கிளாடிஸ் ராணியை ஜோதிமணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்து வைத்தனர். 

விருப்பமில்லாத திருமணத்தால் ஆத்திரத்தில் இருந்துள்ளார் ஜோதிமணி. இதனிடையே திருமணமான 2 நாட்களில் 4 மாத கர்ப்பிணியான தன் மனைவியை அவனியாபுரம் அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்து எரித்துவிட்டு தப்பினார். 

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சில நாட்களில் ஜோதிமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இப்போது ஜாமினில் வெளியே வந்த ஜோதிமணி, தினமும் சோழவந்தான் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். 

சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் வந்த அவரை சிலர் அரிவாளுடன் துரத்தவே, உயிருக்கு பயந்து ஜோதிமணி ஓட்டம் பிடித்தார். பின்னர் நாகமலை புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் இருந்த போலீசாரிடம் தஞ்சமடைந்தார் ஜோதிமணி. 

அப்போது அவரை விரட்டி வந்தவர்கள் தப்பி ஓடவே, அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த சூழலில் ஜோதிமணியால் கொல்லப்பட்ட கிளாடிஸ்ராணியின் சகோதரர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. தன் சகோதரியை கொடூரமாக  கொன்ற ஜோதிமணியை தீர்த்துக்கட்ட வேண்டும் என திட்டமிட்டு கிளாடிஸ் ராணியின் சகோதரர் சத்ய கிளிண்டன் மற்றும் அவரின் நண்பர் அர்ஜூனன் ஆகியோர் அரிவாளுடன் விரட்டியதும் தெரியவந்தது. 

இதன்பேரில் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருமணத்திற்கு முன்பே தன் சகோதரியை கர்ப்பமாக்கி அதன் பிறகு வாழ்க்கைக்காக போராட்டம் நடத்தி திருமணம்  செய்த அவரை எரித்துக் கொன்றவரை பழி தீர்க்க திட்டமிட்டதாக போலீசில் சத்ய கிளிண்டன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1344 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

337 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

50 views

பிற செய்திகள்

பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 4 பேர் கைது - தப்பி ஓடிய ஒருவரை தேடி வரும் போலீசார்

சென்னை அருகே பட்டாக்கத்தியுடன் சுற்றி வந்த 4 குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

14 views

ரசாயன தொழில்துறையினர் "தமிழகத்தில் முதலீடு செய்ய முன் வரவேண்டும்" - அமைச்சர் தங்கம் தென்னரசு

ரசாயன தொழில்துறையினர் தமிழகத்தில் பெரிய அளவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அழைப்பு விடுத்துள்ளார்.

11 views

இல்லம் தேடி கல்வித்திட்ட பிரசார வாகனம் - கொடியசைத்து தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

தர்மபுரியில் இல்லம் தேதி கல்வித்திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

9 views

மீனாட்சி அம்மன் கோயிலில் தொடரும் அவலம் "கழிப்பறையை தேடி அலைய வேண்டியுள்ளது"

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

10 views

2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் கமலுக்கு பெரிய பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், 2 தவணை தடுப்பூசி செலுத்தியதால் தொற்று வந்தும் பெரிய பாதிப்பு இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

27 views

திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்

கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.

278 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.