மீனாட்சி அம்மன் கோயிலில் தொடரும் அவலம் "கழிப்பறையை தேடி அலைய வேண்டியுள்ளது"

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
x
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கழிப்பறை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சித்திரை வீதிகளில் உள்ள கழிப்பறைகளை கோவில் நிர்வாகமே பராமரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அங்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த கழிப்பறைகளும் முறையாக பராமரிப்பின்றி சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள்  கழிப்பறைகளை தேடி அலைவது தினமும் தொடர் கதையாகி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்