அண்ணா பல்கலைக்கழக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி "கல்விக்கு வரி என்பதை தகர்க்க வேண்டும்" - ஓ.பி.எஸ்

அண்ணா பல்கலைக்கழக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. கட்டணம் அமலாக இருப்பது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி கல்விக்கு வரி என்பதை தகர்க்க வேண்டும் - ஓ.பி.எஸ்
x
அண்ணா பல்கலைக்கழக சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. கட்டணம் அமலாக இருப்பது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜூன் 2017.ல் சட்டப் பேரவையில் ஜி.எஸ்.டி. வரிச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, கொள்ளை வரி எனக் கூறிய ஸ்டாலின், முதல்வராக இன்று 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை அனுமதித்துள்ளதாக சாடியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக சேவைகளுக்கு, ஜி.எஸ்.டி வரி வசூலிக்குமாறு வணிக வரித்துறை கூறியதன் மூலம், ஏழை, எளிய மாணவர்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஓ.பி.எஸ், கல்விக்கு வரி என்பது எந்த விதத்தில் வந்தாலும் அதை தகர்த்தெறிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்