நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - நாளை முதல் அதிமுக விருப்ப மனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - நாளை முதல் அதிமுக விருப்ப மனு
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், நாளை முதல் 29ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படும் என அறிவித்துள்ளனர். அந்தந்த மாவட்ட கட்சி அலுவலகங்களில் விருப்ப மனு பெறலாம் என்றும் சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் அதிமுக தலைமை அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். 

மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் பெறுபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.  நகர் மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்ப பெறுபவர்கள் 2 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பம் பெறுபவர்கள் ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  கொரோனா வழிமுறைகளை பின்பற்றி விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்