விவசாய பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள்; "கூலியும் மிச்சம் ஆகிறது" - தமிழக விவசாயிகள் கருத்து

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் விவசாயப் பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
விவசாய பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள்; கூலியும் மிச்சம் ஆகிறது - தமிழக விவசாயிகள் கருத்து
x
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் விவசாயப் பணிகளிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம், வீரராக்கியம்,  கட்டளை, லாலாபேட்டை, மகாதானபுரம், மாயனூர், மணவாசி உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நெற்யிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. அங்கு, வழக்கமாக அப்பகுதி மக்களே நடவுப் பணிகளில் ஈடுபடும் நிலையில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நடவுப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வடமாநிலத் தொழிலாளர்கள், 2 நாட்கள் நடவுப் பணியை ஒரே நாளில் முடிப்பதாகவும், இதனால் கூலியும் மிச்சம் ஆவதாகவும் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்