ஜெ. நினைவு இல்லம் - நீதிமன்றம் கருத்து

சென்னை மெரினாவில் ஜெயல‌லிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை பொது நோக்கமாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெ. நினைவு இல்லம் - நீதிமன்றம் கருத்து
x
சென்னை மெரினாவில் ஜெயல‌லிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதை பொது நோக்கமாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஜெயலலிதாவின் போயஸ்தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி அளித்த 123 பக்க தீர்ப்பில், ஏற்கெனவே, 80 கோடி ரூபாய் செலவில் மெரினா கடற்கரையில் ஜெயல‌லிதாவுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவதில் எந்த பொது பயன்பாடு சம்பந்தப்பட்டுள்ளதாக கருத முடியாது என கூறியுள்ளார் ஆட்சியாளர்களின் நினைவாக பிரமிடுகளையோ, தாஜ்மஹாலையோ எழுப்ப, இந்தியா எகிப்து ஆட்சியாளர்களிடமோ, முகலாய பேரரசர்கள் வசமோ இல்லை எனவும்,இந்தியா, மக்களுக்கு சொந்தமானது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.வேதா நிலையத்திற்கு யாரும் உரிமையாளர் இல்லை என்ற ரீதியில், அரசு தானே அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது என்றும்,வேதா இல்லம் உரிய விதிகளை பின்பற்றாமல், கையகப்படுத்தப் பட்டதாகவும் நீதிபதி கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்