ஈஷா யோகா மையத்துக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்

ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஈஷா யோகா மையத்துக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய முடியாது - உயர்நீதிமன்றம்
x
ஈஷா யோகா மையத்துக்கு எதிராக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஈஷா யோகா மையம் குழந்தைகள் உரிமைகளை மீறியதாக கூறி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து, ஈஷா யோகா மையத்துக்கு சம்மனும் அனுப்பியது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்ப‌ப்பட்ட இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி ஈஷா நிர்வாகம் வழக்கு தொடர்ந்த‌து. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், சம்மனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உக‌ந்த‌த‌ல்ல என கூறி சம்மனை ரத்து செய்ய மறுத்துவிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்