லஞ்ச புகாரில் சிக்கிய பெண் அதிகாரி - கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல்
பதிவு : நவம்பர் 24, 2021, 04:59 PM
வேலூரில் லஞ்ச புகாரில் சிக்கிய பெண் தொழில்நுட்ப அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூரில் லஞ்ச புகாரில் சிக்கிய பெண் தொழில்நுட்ப அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் வேலூர் மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளராக ஷோபனா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் தீபாவளியையொட்டி கட்டட ஒப்பந்ததாரர்களிடம் பண வசூல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்தன. இதனிடையே கடந்த 2ஆம் தேதி தொரப்பாடி-அரியூர் சாலையில் உணவகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதன் உள்ளே இருந்த பையில் 5 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஷோபனாவின் குடியிருப்பில் நடந்த சோதனையில் 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்ச்சியாக ஷோபனாவின் சொந்த ஊரான ஒசூர் நேரு நகரில் உள்ள அவரின் வீட்டில் சோதனை நடந்தது. அப்போது அங்கே 2 கோடி ரூபாய் ரொக்கப்பணம், 38 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோவுக்கும் அதிகமான வெள்ளி பொருட்கள், 28 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்புச் சான்றிதழ், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஷோபனா மீது ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், வேலூர் தொழில்நுட்பக் கல்வி கோட்ட செயற்பொறியாளர் பதவியிலிருந்த ஷோபனா, திருச்சி வட்ட பொதுப்பணித்துறையில், கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துணைக் கண்காணிப்புப் பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணைக்கு அழைத்தால், ஷோபனா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அவருக்கு பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 27ம் தேதி ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

9 views

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

11 views

வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து கைவரிசை - பணத்தை திருடிய குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

பொள்ளாச்சி அருகே வருமானவரித்துறை அதிகாரி வேடமிட்டு பணத்தை அபேஸ் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பொள்ளாச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

10 views

புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடி - மற்றொரு ஜோடியை நிறுத்தி வைத்து விட்டு அபேஸ்

சேலத்தில் 25 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புல்லட்டை திருடிச் சென்ற காதல் ஜோடியை போலீசார் தேடி வருகின்றனர்.

10 views

"கிறிஸ்துவ பள்ளிகளில் மதமாற்றம் செய்வதில்லை" - கார்த்தி சிதம்பரம் (நாடாளுமன்ற உறுப்பினர்)

கிறிஸ்துவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்வதில்லையென தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், தஞ்சை மாணவி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

10 views

தொழிலதிபர் தன்ராஜ் கோச்சாரின் சொத்துகள் முடக்கம் - அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னையை சேர்ந்த தொழிலதிபர் தன்ராஜ் கோச்சார் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 69 கோடியே14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.