"தக்காளி விலையை குறையுங்கள்"- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

தக்காளி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தக்காளி விலையை குறையுங்கள்- அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
x
தக்காளி விலை வரலாறு காணாத வகையில் கிலோ 180 ரூபாய் வரை உயர்ந்துள்ளதை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டாத அளவு உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதுமானதல்ல என கூறும் ராமதாஸ், பெரும்பாலான காய்கறிகளின் விலை நூறு ரூபாயை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகளிடம் அரசே கொள்முதல் செய்வதன் மூலம், தக்காளி விலையை குறைக்கலாம் என்றும், விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றை நிரந்தரமாக ஏற்படுத்தவும் ராமதாஸ் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்