ஆக்கிரமிப்பு -ஆட்சியர் மீது நீதிபதி கடும் கோபம்

பெரியார் வைகை நீர்ப்பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை 2 வாரத்தில் அகற்றவில்லை என்றால் மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
ஆக்கிரமிப்பு -ஆட்சியர் மீது நீதிபதி கடும் கோபம்
x
மதுரை புதுதாமரைப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். விவசாயத்தையே முழுமையாக நம்பியுள்ள புது தாமரைப்பட்டி கிராம‌ம், வி.என்.சிட்டி என்ற  நிறுவனம் கட்டியுள்ள குடியிருப்புகளால், நல்ல மழை பெய்தும், தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருவதாக கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்  மனுதார‌ர் தரப்பில் வி.என்.சிட்டி நிறுவனம் கட்டிய சுற்றுச்சுவர், வாய்க்கால் ஆக்கிரமிப்பு, வருவாய் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. 

இதை கண்டு கோபமடைந்த நீதிபதிகள் அதிகாரிகள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். 

உயர்நீதிமன்ற மதுரை கிளையை சுற்றிலும் கழிவுநீர், மழைநீர் தேங்கி நிற்பது குறித்து, மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம்  புகார் அளித்த‌தாகவும்,  இதுவரையும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் நீதிபதிகள் கூறினர். 

நீதிபதிகள் நாங்கள் கூறியே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,  நீதிமன்றத்திற்கே இந்த நிலை என்றால்  பொது மக்களின் நிலை என்ன? என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

மாவட்ட ஆட்சியர் , மாநகராட்சி ஆணையர் ஆகியோரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறிய நீதிபதிகள்,

பெரியார் வைகை நீர்வரத்து வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை 2 வாரங்களில் அகற்றாத பட்சத்தில் ஆட்சியர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து வழக்கை ஒத்திவைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்