"ஆம்புலன்ஸ் வழங்க தாமதப்படுத்திய நிறுவனம்; நிறுவனம் முன்பே துடிதுடித்து இறந்த தொழிலாளி" - 17 மணி நேரமாக தொடர்ந்த போராட்டம்

கரூரில் உயிரிழந்த தொழிலாளியில் உடலை வைத்து 17 மணி நேரமாக தொடரும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் வழங்க தாமதப்படுத்திய நிறுவனம்; நிறுவனம் முன்பே துடிதுடித்து இறந்த தொழிலாளி - 17 மணி நேரமாக தொடர்ந்த போராட்டம்
x
கரூரில் உயிரிழந்த தொழிலாளியில் உடலை வைத்து 17 மணி நேரமாக தொடரும் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் ஆத்தூர் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான டெர்மினல் பாய்ன்ட்டில் வேலை செய்து வந்த ஜெயம்கொண்டத்தை சேர்ந்த செல்வமணிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நிறுவனத்தில் இருந்த ஆம்புலன்ஸ் வசதியை கோரியபோது, ஒரு மணி நேரம் தாமதப்படுத்தியதாகவும், நிறுவனத்தின் முன்பே செல்வமணி துடிதுடித்து உயிரிழந்த‌தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒன்று திரட்டி
அந்த நிறுவனத்தை கண்டித்து 17 மணி நேரமாக போராட்டம் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியதால் அங்கு மேலும் பரபரப்பு உருவானது. 


Next Story

மேலும் செய்திகள்