75 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம் - பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி
பதிவு : நவம்பர் 23, 2021, 05:05 PM
மதுரையில் மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் அத்துமீற முயன்று கடைசியில் கொலையாளி ஆகியிருக்கிறார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் மார்க்கெட் ரோடு பகுதியில் சாலையோரம் 75 வயதான மூதாட்டி வசித்து வந்தார். அப்பகுதியில் உள்ள கடைகளில் யாசகம் பெற்று வந்த அவர், இரவு நேரங்களில் அந்த பகுதியில் சாலையோரம் படுத்து உறங்குவது வழக்கம். சம்பவத்தன்று அதுபோல் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென சோழவந்தான் அருகே கருப்பட்டி பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவர் மூதாட்டியின் அருகே வந்துள்ளார். அப்போது திடீரென மூதாட்டியை தூக்கிச் சென்ற அவர், அவரிடம் அத்துமீற முயன்றுள்ளார். அப்போது அந்த மூதாட்டி எதிர்ப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அந்த நபர், மூதாட்டியை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். நடந்த இந்த சம்பவங்கள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமரா மூலம் தெளிவாக தெரியவே, இதை காவல் நிலையத்தில் இருந்த போலீசார் கண்காணித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள், மணிமாறனை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் இளம்பெண் என நினைத்து மூதாட்டியை தூக்கிச் சென்றதாக போலீசில் அவர் தெரிவித்துள்ளார். கைதான மணிமாறன் மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை என பல வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. சிறையில் இருந்த அவர், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வந்துள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் மூதாட்டியை கொலை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1230 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

203 views

மழை - மத்தியக்குழு தமிழகம் வருகிறது

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு தமிழகம் வருகிறது

26 views

பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பேரணி - ஆயிரக்கணக்கானோர் பேரணியில் பங்கேற்பு

தென் அமெரிக்க நாடான சிலியில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பால் புதுமையினர் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

25 views

நம்பி நாராயணன் வழக்கு - உளவுத்துறைக்கு உத்தரவு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனை உளவு வழக்கில் சிக்க வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து, சிபிஐ தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு உளவுத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

18 views

பெட்ரோல், ரசாயனம் விலை உயர்வால் பண வீக்க விகிதம் அதிகரிப்பு

2021 அக்டோபர் மாதத்துக்கான மொத்த விலை பணவீக்க விகிதம் 12 புள்ளி ஐந்து நான்கு சதவீதமாக உள்ளது.

16 views

பிற செய்திகள்

திமிங்கல சுறா மேல் சவாரி செய்யும் மீனவர் - வேகமாக பரவி வரும் வீடியோ

இலங்கை மீனவர் ஒருவர் கடலில் திமிங்கல சுறாவின் மீது ஏறி துணிச்சலாக சவாரி செய்து நீந்தும் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

0 views

அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொறுப்பு தொடர்பாக சர்ச்சை; டாக்டர் அனு ரத்தினா மீண்டும் அதே பொறுப்பில் நியமனம் - மா.சுப்பிரமணியன்

பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பொறுப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், டாக்டர் அனு ரத்தினா மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

0 views

சட்ட ஒழுங்கை காக்க நடவடிக்கை தேவை - ஒ.பி.எஸ்

காவல் பணியில் ஈடுபட்ட பூமிநாதன், கனகராஜ் ஆகியோரின் உயிரிழப்பு, சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என கேள்வி எழுப்புவதாக உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

8 views

"தொழில்துறையின் மிக முக்கிய தூண் கோவை மாவட்டம் தான்" - மு.க.ஸ்டாலின்

22 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முதலீடுகள் மூலம், இளைஞர்களுக்கு சொந்தஊர் அருகிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

6 views

59 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாற்றம்

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 35 ஆயிரத்து 208 கோடியில் 59 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

9 views

வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு - மத்திய குழு ஆய்வு

வடகிழக்கு பருவ மழையால் வேலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.