இல்லம் தேடி கல்வி- 2 லட்சம் பேர் விண்ணப்பம்

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பதிவு செய்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் முனைவர் பட்டம் முடித்த 856 பேரும் பதிவுசெய்துள்ளனர்.
இல்லம் தேடி கல்வி- 2 லட்சம் பேர் விண்ணப்பம்
x
கொரோனா பாதிப்பால் கற்றல் பாதிப்புகளை சந்தித்த 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அவர்களின் இல்லங்களை தேடிச்சென்று, மாலையில் கல்வி கற்பிப்பதற்காக, இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. 


இத்திட்டத்தில் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்களுக்கு, கல்வித்துறை அழைப்பு விடுத்தது. மாலையில் ஒரு மணி நேரம் முதல், 2 மணி நேரம் வரையிலான இந்த பணிக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் ஊதியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் பணியாற்ற, இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதையை நிலவரப்படி, 2 லட்சத்து, 8 ஆயிரத்து 341 பேர் பதிவு செய்துள்ளனர். 


அவர்களில், ஆண்கள் 40ஆயிரத்து 598 பேரும், பெண்கள் 1 லட்சத்து 67 ஆயிரத்து, 675 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 68 பேரும் பதிவு செய்துள்ளனர்.


இதில்,முனைவர் பட்டம் பெற்றவர்கள் 856 பேரும், பட்டப்படிப்பு முடித்தவர்கள்  95ஆயிரத்து 582 பேரும் பதிவு செய்துள்ளனர்,


 முதுகலை பட்டம் பெற்றவர்கள் 58ஆயிரத்து 974 பேரும், பி.எட்., படித்தவர்கள் 16ஆயிரத்து 218 பேர் உட்பட பல்வேறு கல்வித்தகுதிகளை கொண்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்