பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரிக்கை - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க கோரி, திமுக அரசை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க கோரிக்கை - தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக ஆர்ப்பாட்டம்
x
சேலம் 

சேலம் மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க கோரி முழக்கமிட்டனர். 

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில், பாஜக 
மாநில இளைஞரணி துணை தலைவர் அரசு ரங்கேஸ்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில அரசு பிடிவாதமாக பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்காமல் மத்திய அரசை குற்றம் சாட்டி வருவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

மதுரை

மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகே பாஜக மாநகர்  மாவட்டத் தலைவர் மருத்துவர் பா.சரவணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  காவல்துறை பாஜகவின் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ஸ்ரீரங்கம்

பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை என  கோரி, திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பா.ஜ.க இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்