தேங்கிய மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு

ஆம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தேங்கிய மழைநீர்; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு
x
ஆம்பூர் அருகே அரசு அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் - உள்ளி பகுதியை இணைக்கும் பாலாற்று பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதால் கரையோரம் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதனுர் பகுதியில் பல்வேறு இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் தேங்கி உள்ளது.  இவற்றை  சீரமைக்க எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்