ஆற்று வெள்ளத்தில் திட்டு பகுதியில் சிக்கி தவிப்பு - தம்பதி மற்றும் 150 ஆடுகள் பத்திரமாக மீட்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் திட்டுப்பகுதியில் சிக்கிய 2 பேரையும், 150 ஆடுகளையும் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
ஆற்று வெள்ளத்தில் திட்டு பகுதியில் சிக்கி தவிப்பு - தம்பதி மற்றும் 150 ஆடுகள் பத்திரமாக மீட்பு
x
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே   கொள்ளிடம் ஆற்றின் திட்டுப்பகுதியில்  சிக்கிய 2 பேரையும், 150 ஆடுகளையும் மீட்பு படையினர்  பத்திரமாக மீட்டனர். சீர்காழி தாலுகா நாதல்படுகை கிராமம் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுவில் திட்டுப்பகுதி உள்ளது. அங்கு மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்ற 2 பேர் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் செய்வதறியாது தவித்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் 
தீயணைப்புத்துறை வீரர்கள் 3 படகுகள்  மூலம் சென்று ஆற்றின் நடுவில் சிக்கி தவித்த கணேசன், அவரது மனைவி காந்திமதி ஆகியோரை மீட்டனர். 
150 ஆடுகளையும் பாதுகாப்பாக மீட்டு கரை சேர்த்தனர். இதனிடையே கொள்ளிடம் ஆற்றங்கரையில் தாழ்வான பகுதியில் வசித்தவர்கள்  அளக்குடி, அனுமந்தபுரம் மற்றும் ஆச்சாள்புரத்தில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்