வரும் 24ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம்

வரும் 24ஆம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 24ஆம் தேதி மத்திய அமைச்சரவை கூட்டம்
x
வரும் 24ஆம் தேதி நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

டெல்லியில் வரும் புதன்கிழமை, பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடி, வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற ஒப்புதல் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி கூட உள்ள நிலையில், இது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்படும் வரை, போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்