சென்னை வந்த மத்திய குழுவினர் - தலைமைச் செயலாளருடன் ஆலோசனை

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக மத்திய குழுவிற்கு விளக்கப்பட்டது.
சென்னை வந்த மத்திய குழுவினர் - தலைமைச் செயலாளருடன் ஆலோசனை
x
தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில், மழை வெள்ள பாதிப்புகள், புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் மூலமாக மத்திய குழுவிற்கு விளக்கப்பட்டது. இதில், குறிப்பிட்ட நாட்களில் 521% மழை அதிகமாக பெய்ததாகவும், சென்னையில்  778 இடங்களில் மழை நீர் தேங்கியதாக தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 1,236 கிராமங்கள் பாதிக்கப்பட்டதாகவும், 49,900 பொதுமக்கள் மீட்கப்பட்டதாகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12ம் தேதி 100 மி.மீ மழையும், 13ம் தேதி 109 மி.மீ மழையும் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டது.  713 கி.மீ தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்பட்டதாகவும், 624 கி.மீ நகராட்சி சாலைகள் பாதிக்கப்பட்டதாகவும், 39 அரசு கட்டிடங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியதாகவும் கூறப்பட்டது. இறுதியாக  தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.2629 கோடி வழங்க வேண்டுமெனவும் கோரப்பட்டது. 
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தை தொடர்ந்து, சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ரிப்பன் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர். இக்குழு தங்கள் ஆய்வை முடித்துக்கொண்டு வரும் 24ம் தேதி முதலமைச்சரை சந்திக்க உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்