திமுக எம்.பி.க்கள் கூட்டம் - 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை தாக்கல் செய்யக் கோரி, திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
திமுக எம்.பி.க்கள் கூட்டம் - 2 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வருகிற 29-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில், திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அப்போது, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தி.மு.க. உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், என்னென்ன பிரச்சினைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் உயிர்த்தியாகம் செய்த விவசாயிகளுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல், குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தில், விவசாய சங்கங்களுக்கு ஆதரவாக திமுக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதாகவும், 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அறவழிப் போராட்டங்கள் மூலம் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வைத்த விவசாயிகளைப் பாராட்டுவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்