தீயணைப்பு துறை சார்பில் நடவடிக்கை - எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?

தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவமழையால் பல்வேறு பகுதிகள் பாதிப்புக்குள்ளாகிய நிலையில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தீயணைப்பு துறை சார்பில் நடவடிக்கை - எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ?
x
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூரில் கடந்த இரண்டு நாட்களாக வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 

இங்கு 97 இடங்களை வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்து 947 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

இங்கு 47 இடங்களில் சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதாகவும், 835 விலங்குகள் காப்பாற்றப்பட்டதாகவும், 127 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்டதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது

சென்னையில் மட்டும் ஆயிரத்து 150 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் பணிபுரிய தயார் நிலையில் உள்ளதாகவும், 

சென்னையில் 217 குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர் வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும், இதுவரை தாழ்வான பகுதிகளில் சிக்கி தவித்த ஆயிரத்து 808 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சென்னையில் 217 இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டதாகவும்,  285 விலங்குகள் காப்பாற்றப்பட்டதாகவும், 127 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்