"அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை" - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திட்டவட்டம்

அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அம்மா மருந்தகங்கள் மூடப்படவில்லை - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திட்டவட்டம்
x
தமிழகத்தில் அம்மா மருந்தகங்கள் விலை உயர்ந்த மருந்துகளை விலை குறைவாக மக்களுக்கு வழங்கி வருவதாகவும், அதனை திமுக அரசு மூட முடிவெடுத்துள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். 

அதற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிக்கை மூலம் பதில் அளித்துள்ளார். அதில், அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்கட்சி தலைவர் கூறுவது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என அவர் மறுத்துள்ளார். 

மேலும், 126 ஆக இருந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை, திமுக அரசு பொறுப்பேற்ற பின் 131 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 174கூட்டுறவு மருந்த‌கங்களையும் சேர்த்து மொத்தம் 305 மருந்தகங்கள் செயல்பட்டு வருவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


ஏழை எளிய மக்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர் என்பதை  உணர்ந்ததாலேயே அம்மா மருந்தகங்களில் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஆண்டுக்கு 40 கூட்டுறவு மருந்தகங்களை துவக்கப்படும் என சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் அறிவித்துள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே எதிர்க்கட்சித் தலைவர் கூறும் தகவல் முற்றிலும் தவறான ஒன்று என அறிக்கை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்