சிறுமியை எரித்த வளர்ப்பு தந்தை - சிகிச்சை பெற்று வந்த சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த பரிதாபம்
பதிவு : நவம்பர் 20, 2021, 07:25 PM
நெல்லை அருகே சிறுமியை வளர்ப்பு தந்தை எரித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவர் தன் 2ஆம் மனைவி சுஜா மற்றும் அவரின் 3 பிள்ளைகளோடு நெல்லை மாவட்டம் காவல் கிணறு பகுதியில் வசித்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இதனிடையே சுஜாவின் மகளான 10 வயதான மகேஸ்வரி என்ற சிறுமி கடையில் திருடியதாக கூறப்படுகிறது. இதனை கடைக்காரர் அந்தோணிராஜிடம் சொன்னதால் ஆத்திரமடைந்த அவர், மண்ணெண்ணெயை எடுத்து வளர்ப்பு மகள் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் தீக்காயம் ஏற்பட்ட நிலையில் சிறுமி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி 3 நாட்களுக்கு பிறகு சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை அந்தோணிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

134 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

50 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

48 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

27 views

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

22 views

பிற செய்திகள்

குண்டர் தடுப்பு சட்டத்தில் 351 பேர் மீது நடவடிக்கை

சென்னையில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 351 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

0 views

திமுக வட்டச் செயலாளர் அலுவலகம் சூறை - ரூ.3 ஆயிரத்தை திருடிச் சென்ற 2 பேர் கைது

சென்னை திமுக வட்டச் செயலாளர் அலுவலகத்தை சூறையாடி பணத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

0 views

22ஆம் தேதி கோவை செல்கிறார் முதல்வர் - முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வரின் கோவை வருகையை ஒட்டி, மேடை அமைப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

6 views

மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கைது - தகர்த்தெறியப்பட்ட இரயில் தண்டவாளம்

மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கைது - தகர்த்தெறியப்பட்ட இரயில் தண்டவாளம்

13 views

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

விவசாயிகளின் போராட்டத்தில் முடிவு காணுங்கள் - பிரதமர் மோடிக்கு பாஜக எம்பி வருண் காந்தி கடிதம்

11 views

குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு

குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும், குழந்தைகளுக்கான மாநில கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.