கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு -மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்

ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் கடலூரில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு -மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார்
x
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் கடலூரில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து  அமைச்சரவை கூட்டத்தில் எடுத்துரைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பெரிய கங்கணாங்குப்பம், உச்சிமேடு, ஞானமேடு, சின்ன கங்கங்கணாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒவ்வொரு ஆண்டும் கன மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக தெரிவித்தார். மேலும் வெள்ள பாதிப்பை சரிசெய்ய கடந்த 10 ஆண்டுகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்