விளையாட்டு வீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு - புதிய அரசாணை வெளியிட்டது அரசு
பதிவு : நவம்பர் 19, 2021, 01:48 AM
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு சேர்த்து அரசாணை வெளியாகியுள்ளது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு சேர்த்து அரசாணை வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் 3 சதவீத இடஒதுக்கீட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுகிறது.இந்த திட்டத்தின் கீழ் சிலம்பம் விளையாட்டுடன் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி மற்றும் உஷீ விளையாட்டுகளையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிலம்ப விளையாட்டு வீரர்கள் பெருமளவில் பயன் பெறுவார்கள் என்றும், தமிழினத்தின் பழங்கால தற்காப்புக் கலையான சிலம்பத்திற்கு மாபெரும் அங்கீகாரம் கிடைத்திருப்பது, ஒட்டுமொத்த தமிழினத்திற்கு பெருமை சேர்க்கும் என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.