வரி ஏய்ப்பு புகார்- வருமானவரித்துறை சோதனை : திமுக இளைஞரணி அமைப்பாளர் வீட்டிலும் சோதனை
பதிவு : நவம்பர் 17, 2021, 06:51 PM
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னையில் இரண்டு பிரபல தனியார் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில் சென்னையில்  இரண்டு பிரபல தனியார் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் வசந்தம் ப்ரமோட்டர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் ஜவகர்.  இவரது அலுவலகத்தில் இன்று காலை முதல்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஆறுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் அதிபரான ஜவகர் கடந்த 2017ஆம் ஆண்டு "பயமா இருக்கு" என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், சென்னை மேற்கு அண்ணாநகர் பகுதியில் லோகேஷ் என்பவர் நடத்தி வரும் மகாலட்சுமி பில்டர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லோகேஷ், சென்னை கிழக்கு பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.இவருக்கு சொந்தமான இடங்களிலும்  வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகள் என மொத்தம் எட்டு இடத்தில் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

(27/08/2021) திரைகடல் : "வெந்து தணிந்தது காடு" புதிய போஸ்டர் - அடுத்தடுத்து வெளியாகும் சிம்பு பட தகவல்கள்

1182 views

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

கோலியே கேப்டனாக தொடர்வார் என உறுதி

233 views

உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீர‌ர்கள்

உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீர‌ர்கள் உள்பட 54 இந்திய வீர‌ர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

164 views

மறு வாழ்வு மையத்தில் டி - 23 புலி - தமிழகத்திற்கு வீடியோ அனுப்பி வைத்த கர்நாடக வனத்துறை

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட டி 23 புலியின் புதிய வீடியோ காட்சியை வனத்துறையினர்,

45 views

பிற செய்திகள்

பொங்கல் தொகுப்பு - அரசு அறிவிப்பு

20 பொருட்கள் கொண்ட பொங்கல் சிறப்பு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

46 views

கனமழையால் படகுகள் சேதம் - படகுகளை ஆய்வு செய்த அமைச்சர்கள்

கனமழையால் சென்னை காசிமேட்டில் சேதமடைந்த படகுகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டனர்.

13 views

ஆதிக்க கலாசாரத்தை ஒழிக்க முடியவில்லை - நீதிபதி சஞ்சீப் பானர்ஜி

மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தன்னால் ஆதிக்க கலாச்சாரத்தை முழுமையாக தகர்த்தெறிய இயலவில்லை எனக் கூறியுள்ளார்.

515 views

கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - "அடையாளப்படுத்திய வீடியோக்களை நீக்குங்கள்"

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய வீடியோக்களை நீக்குமாறு யூட்யூப் சேனல்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

36 views

போராட்டம் நடத்திய மாணவர்கள் - விரட்டி விரட்டி கைது செய்த போலீசார்

ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

42 views

சேலம் அடுத்த நங்கவள்ளியில் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டதாக புகார் : இருதரப்பு மோதல் - மறியல் - சமூக வலைதளங்களில் பரவும் காட்சி

சேலம் அடுத்த நங்கவள்ளியில் தீண்டாமைச்சுவர் புகார் விவகாரம் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.