கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கு - "அடையாளப்படுத்திய வீடியோக்களை நீக்குங்கள்"

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய வீடியோக்களை நீக்குமாறு யூட்யூப் சேனல்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
x
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்திய வீடியோக்களை நீக்குமாறு யூட்யூப் சேனல்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் மற்றும் இயற்பியர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மாணவியின் மரணம் குறித்து செய்தி வெளியிட்ட யூட்யூப் சேனல்கள் அவரின் போட்டோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டன. போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பொதுவெளியில் வெளியிடக் கூடாது என்பதால் அதனை உடனே நீக்குமாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 யூட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோக்களை நீக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவியின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விபரங்கள், பள்ளியின் விபரங்கள் உள்ளிட்டவற்றை இனி பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்