"வீடு வாங்க சேமித்து வைத்த பணம்; 1800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளேன்" - நடிகர் விஷால்
பதிவு : நவம்பர் 17, 2021, 04:35 AM
சொந்த வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை ஆயிரத்து 800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சொந்த வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை ஆயிரத்து 800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தனது குடும்பத்திற்கு கூட தெரியாமல் புனித் ராஜ்குமார் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளை செய்து வந்துள்ளார். தற்போது வரை தனக்கு சொந்த வீடு இல்லை என கூறிய விஷால், வீடு வாங்க சேமித்து வைத்துள்ள பணத்தை, புனித் ராஜ்குமார் தத்தெடுத்த 1800 குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணிப்பதாக கூறினார். மேலும் நடிகைகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருமே தன்னால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்தார். அதுவே மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஆத்மாவை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.