"10.5% ஒதுக்கீடு ரத்துக்கு தடை வேண்டும்"-தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, மனுதாரர் வாதங்களை கேட்காமலேயே தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
10.5% ஒதுக்கீடு ரத்துக்கு தடை வேண்டும்-தமிழக அரசு மேல்முறையீடு
x
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு, மனுதாரர் வாதங்களை கேட்காமலேயே தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டம் அரசிலமைப்புக்கு எதிரானது என தெரிவித்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அதை கடந்த 1-ஆம் தேதி ரத்து செய்தது.  

10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த தீர்ப்ப்பை, எதிர் மனுதாரர்களின் வாதங்களை கேட்காமலேயே, தடை விதிக்குமாறு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. 

10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த மதுரைக் கிளை உத்தரவு தவறானது என்றும், இதில், உச்ச நீதிமன்றம் தலையிடாவிட்டால் ஏராளமான கோரிக்கை மனுக்களும் தாக்கலாகும் சூழல் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளது.

 இந்த விவகாரத்தில் ஏற்கனவே 11 பேர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர். சி.ஆர். ராஜன், ஏ.ஆர். கோகுல்ராஜ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்