நீட் தேர்வு முடிவுகளின் தரவுகள் - எந்த மாநிலங்களுக்கும் அனுப்பாத தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் கடந்த நிலையிலும் கூட , நாடு முழுவதும் எந்த ஒரு மாநிலங்களுக்கும் நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய தரவுகளை தராமல் தேசிய தேர்வு முகமை அமைதி காத்து வருகிறது .
நீட் தேர்வு முடிவுகளின் தரவுகள் - எந்த மாநிலங்களுக்கும் அனுப்பாத தேசிய தேர்வு முகமை
x
அகில இந்திய கலந்தாய்வுக்கான பணிகளும் துவங்காததால், மாநிலங்களில் நடைபெறக்கூடிய மருத்துவப் படிப்பு சேர்க்கை கலந்தாய்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையிலும் கூட எந்த ஒரு மாநிலங்களுக்கும் நீட் தேர்வு முடிவுகள் அடங்கிய தரவுகளை தேசிய தேர்வு முகமை இன்னும் வழங்கவில்லை. தமிழகத்திற்கும் இது வரை தேர்வு முடிவுகள் அடங்கிய புள்ளி விவரங்கள் வரவில்லை என, மருத்துவக் கல்வி இயக்குனரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் முதல் சுற்று கலந்தாய்வு துவங்கி முடிந்த பிறகே, மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.  அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் முதல் கட்ட கலந்தாய்வு துவங்காததால் மாநிலங்களில் நடைபெறக் கூடிய மருத்துவ சேர்க்கை பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ படிப்பு சேர்க்கைக் இரண்டு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டியிருக்கிறது. இரண்டு சுற்று கலந்தாய்வுகள் முடிந்து, மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இந்த கல்வி ஆண்டில் மிகவும் கால தாமதம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்