கோவில் நிதியில் புதிய கல்லூரிகள் - புதிய கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை

கோவில் நிதியில் புதிய கல்லூரிகள் தொடங்க கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுல்ளது.
கோவில் நிதியில் புதிய கல்லூரிகள் - புதிய கல்லூரிகளுக்கு அனுமதி இல்லை
x
கொளத்தூரிலும், பரமத்திவேலூரிலும், உள்ளிட்ட நான்கு இடங்களில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க உயர்கல்வித்துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில், இந்து சமய அறநிலைய துறையின் சட்டப்படி, கல்லூரிகள் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும், கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டது. கொளத்தூரில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமாக சொத்து இல்லாத நிலையில், கல்லூரி தொடங்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கல்லூரி கட்டுவது அரசின் கொள்கை முடிவு என்றும், இந்து சமய அறநிலையத் துறை  சட்டத்தை பின்பற்றியே கல்லூரிகள் தொடங்குவதாக விளக்கம் அளித்தார். எட்டு கல்லூரிகள் தொடங்க முடிவெடுத்து, கொளத்தூரில் ஒரு கல்லூரி செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கோவில் நிதியை பயன்படுத்துவதால் சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என்றதுடன்,  தொடங்கப்பட்ட 4 கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகளை நீதிமன்ற அனுமதியின்றி தொடங்க  கூடாது என உத்தரவிட்டனர். குறிப்பிடப்பட்ட கல்லூரிகளில் ஒரு மாதத்துக்குள் மத வகுப்புகள் நடத்தவில்லை என்றால் கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட முடியாது எனவும் கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்