தமிழகத்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் - வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு

தமிழகத்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் - வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு
x
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு15ம் தேதி காலை வரை அமலில் உள்ள நிலையில், நோய்ப் பரவல் கட்டுப்பாடுகள் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை வரையறை செய்து ஆட்சியர்களும், உள்ளாட்சி அமைப்புகளும் தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், 


முதல் தவணை மட்டும் செலுத்திக் கொண்டவர்கள் 2வது தவணையையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும்,

குழுக்கள் அமைத்து வீடு வீடாகக் கண்காணிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் நிவாரண முகாம்களில் தங்கிக் கொள்ளுமாறும், சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்