கனமழையால் காய்கறிகளின் விலை உயர்வு - தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை

தொடர் மழையால் காய்கறி உற்பத்தி மற்றும் வரத்து குறைய தொடங்கியதால் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.
கனமழையால் காய்கறிகளின் விலை உயர்வு - தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை
x
விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டது. 

இதனால், தக்காளி, அவரை, முருங்கை, பீன்ஸ் கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

கேரட் கிலோ 70 ரூபாய்க்கும், சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, புடலங்காய், பீட்ரூட், நூக்கல், காளிஃப்ளவர் கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையானது.

கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகள் 40 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

வழக்கமாக 350 லாரிகளில் காய்கறி வரத்து இருந்த நிலையில் கனமழையால் 150 லாரிகளாக குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனையிலும் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்