மழை வெள்ள பாதிப்பு: குளக்கரையில் வெடிப்பு - கோட்டாட்சியர் ஆய்வு

நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மழை வெள்ள பாதிப்பு: குளக்கரையில் வெடிப்பு - கோட்டாட்சியர் ஆய்வு
x
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால்   அனுமன் ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு  பணகுடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 15-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் பணகுடி அருகேயுள்ள பரிவிரிசூரியன் குளக்கரையில் வெடிப்பு ஏற்பட்டு மண் சரிந்து உடைப்பு ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட சேரன்மகாதேவி கோட்டாட்சியர் சிந்து மண் கொண்டு நிரப்ப உத்தரவிட்டார். ஆய்வின் போது  வருவாய்த்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். 


Next Story

மேலும் செய்திகள்