மின்மோட்டார் பழுது பார்க்க சென்ற மாமனார்,மருமகன் பலி - விஷவாயு தாக்கியதில் உயிரிழந்த பரிதாபம்
பதிவு : நவம்பர் 14, 2021, 02:01 AM
ராணிப்பேட்டை அருகே விவசாய கிணற்றில் மின்மோட்டார் பழுது பார்க்க இறங்கிய மாமனார், மருமகன் ஆகியோர் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த கரிவேடு கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவர் சித்தஞ்சி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். நிலத்தில் உள்ள உறைகிணற்றில் இருந்த மின் மோட்டாரில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை சரிசெய்வதற்காக மணி கிணற்றின் உள்ளே இறங்கி உள்ளார். அவர் சென்று நீண்ட நேரமாகியும் மேலே வராததால் அவரின் மருமகன் சுபாஷ் சென்றுள்ளார். அப்போது கிணற்றின் உள்ளே இருந்த விஷவாயு தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரின் சடலங்களையும் மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


பிற செய்திகள்

பழனி கோயிலில் நிறைவுற்ற பணிகளை காணொலி மூலம் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பழனி முருகன் கோயிலில் நிறைவுபெற்ற பணிகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

9 views

இருசக்கர வாகனம் மீது மோதிய கார் - தூக்கி வீசப்பட்ட இருவர் - பரபரப்பு காட்சி

பொள்ளாச்சி அருகே பைக் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற இருவர் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

12 views

60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்

சென்னையில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று 160 இடங்களில் நடைபெறுகிறது

7 views

ஓட்டல், கல்லூரிகளில் போதைப் பொருட்கள் விற்பனை - நைஜீரியர் உட்பட 4 பேர் கைது !

ஓட்டல், கல்லூரிகளில் போதைப் பொருட்கள் விற்பனை நைஜீரியர் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் தமிழகத்தில் ஓட்டல் மற்றும் கல்லூரிகளில் போதை பொருட்களை விற்பனை செய்த நைஜீரியர் உட்பட 4 பேரை பெங்களூரு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

9 views

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

கொரோனாவால் உயிரிழந்தோரின் 38 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது !

8 views

தமிழ்நாடு ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்? - ஒரு சிறப்பு தொகுப்பு

இந்த வருடம், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழகம் சார்பாக அலங்கார ஊர்தி இடம்பெற வாய்ப்பில்லை என்பது உறுதி ஆகியிருக்கிறது.

62 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.