கலைமகள் சபா மோசடி செய்ததாக எழுந்த புகார்- "புதிய சிறப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : நவம்பர் 13, 2021, 08:04 AM
மோசடி புகாரில் சிக்கிய கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க பதிவுத்துறையின் உதவி ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 22 ஆண்டுகள் கடந்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை வழங்கவில்லை என கூறினார். கலைமகள் சபா நிர்வாகத்தை எடுத்து நடத்த பதிவுத்துறை உதவி ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக வணிக வரித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். தற்போது நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிர்வாகியை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது நிர்வாகத்தை கவனித்து வரும் அதிகாரி ஹரிஹரன், கலைமகள் சபா நிறுவனத்தின் கணக்குகள் வருமான வரி ஆகியவற்றை தணிக்கை செய்து ஆறு வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறப்பு அதிகாரி ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

64 views

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (16/01/2022) | Morning Headlines | Thanthi TV

54 views

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

மெய்ப்பொருள் காண்பது அறிவு: பொங்கல் வாழ்த்து! காவல் துறை வாகனங்கள் தவறாக பயன் பட கூடாது. மேதகு - 2 தமிழ் ஆவண படம் வெளியீடு

30 views

குளிர்கால ஒலிம்பிக் போட்டி - 2022; "வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடை" - சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு

சீனாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், பொதுமக்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படாது என சீன ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

26 views

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

உலக பொருளாதார மன்றம்.இந்தியா மக்களிடம் 84% வருமானம் குறைந்தது.உத்தரகாண்ட் பாஜக அமைச்சர் வெளியேற்றம்

11 views

பிற செய்திகள்

புதிய மருந்துகள் சோதனைக்கு அனுமதி

புதிய மருந்துகள் சோதனைக்கு தமிழக சுகாதாரத்துறை அனுமதி அளிப்பதற்கான குழுவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

0 views

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் ஜனவரி 24 ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் வெளியாகி உள்ளன.

3 views

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

சேலம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சேலத்தில் காவல்துறையினர், முன்கள பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1 views

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

காலை 7 மணி தலைப்புச் செய்திகள் (25/01/2022)

7 views

தரவரிசை பட்டியல் - புள்ளி விவரங்களில் குழப்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில், புள்ளி விவரங்களில் தெளிவில்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

14 views

"ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பது எனது கனவு"; கடன் வாங்கி படித்தேன், பலன் கிடைத்துள்ளது"

மருத்துவ தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிப்பதாக வெற்றி பெற்ற மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.