கலைமகள் சபா மோசடி செய்ததாக எழுந்த புகார்- "புதிய சிறப்பு அதிகாரியை நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பதிவு : நவம்பர் 13, 2021, 08:04 AM
மோசடி புகாரில் சிக்கிய கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க பதிவுத்துறையின் உதவி ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம், 22 ஆண்டுகள் கடந்தும் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை வழங்கவில்லை என கூறினார். கலைமகள் சபா நிர்வாகத்தை எடுத்து நடத்த பதிவுத்துறை உதவி ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை சிறப்பு அதிகாரியாக மூன்று வாரங்களில் நியமிக்க தமிழக வணிக வரித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டார். தற்போது நிர்வாகத்தை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிர்வாகியை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், தற்போது நிர்வாகத்தை கவனித்து வரும் அதிகாரி ஹரிஹரன், கலைமகள் சபா நிறுவனத்தின் கணக்குகள் வருமான வரி ஆகியவற்றை தணிக்கை செய்து ஆறு வாரங்களில் சிறப்பு அதிகாரியிடம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், சிறப்பு அதிகாரி ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

(14/10/2021) திரைகடல் : சசிகுமார் - ஜோதிகாவின் 'உடன்பிறப்பே'

371 views

6 பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனை - டிச. - ஜன.யில் தனியார் மயமாக்க திட்டம்

டிசம்பர், ஜனவரியில் 5 அல்லது 6 பொதுத் துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று மத்திய அரசின், தனியார்மயமாக்கல் துறையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

84 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

57 views

ராஜஸ்தானின் புதிய அமைச்சரவை பதவியேற்பு - 15 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்று கொண்டது.

20 views

பிற செய்திகள்

"வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி"- கடிதம் மூலம் நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு

மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

4 views

பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு - தொட்டில் கட்டி தூக்கி சென்ற மலைகிராம மக்கள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை கிராமத்தில் பள்ளி ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் அவரை தொட்டில் கட்டி, சுமந்து வந்து மருத்துவமனையில் அனுமதித்தனர்

10 views

சிவப்பு சதுக்கத்தில் கொண்டாட்டம் ஆரம்பம் - ஐஸ் ரிங்கில் ஸ்கேட்டிங் செய்து அசத்தல்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் குளிர்கால திருவிழா வண்ண மையமாக தொடங்கியுள்ளது

7 views

இந்தியா Vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி - முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த‌து

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்த‌து.

7 views

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

(29/11/2021) இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் | Today Headlines

48 views

"பெயரை வைப்பதற்கே திட்டத்தை தொடங்கினார்கள்" - சுப்பிரமணியன் (சுகாதாரத்துறை அமைச்சர்)

சேலத்தில் அம்மா கிளினிக் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்ற ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், செயல்படாத கிளினிக்கின் பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.