வேலைவாய்ப்பு முன்னுரிமை - புதிய பட்டியல்

கொரானாவால் பெற்றோரை இழந்தோர் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முன்னுரிமை - புதிய பட்டியல்
x
வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும் நடைமுறை 51 ஆண்டுகளுக்குப் பின்னர் சீரமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  
 
இதன்படி இனி வேலை வாய்ப்புகளில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்து வாடும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முதல் முன்னுரிமை அளிக்கப்படும். 

தனியார் அல்லது அரசால் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கி பயின்று வளர்ந்து வரும் தாயையும், தந்தையையும் இழந்த வாரிசுதாரர்கள்,


 அந்த இல்லங்களில் இருந்து பெறப்படும் சான்றிதழின் அடிப்படையில் பணியில் சேர்க்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அங்கீகரிக்கப்பட்ட ஆதரவற்றோர் இல்லங்களில் சேர முடியாத கிராமப்புற தாய், தந்தையற்ற நபர்கள், வருவாய் வட்டாட்சியர் மூலம் பெறப்படும் சான்றிதழ் அடிப்படையிலும், முன்னுரிமை பெற தகுதி உடையவர்கள் என தமிழக அரசு கூறியுள்ளது. 


 இதற்கு அடுத்தபடியாக முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழக அரசுப்பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு 2வது மற்றும் 3 வது முன்னுரிமை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 


இதன் பின்பு போரில் உடல் தகுதி இழந்த முன்னாள் ராணுவத்தினர், வீரமரணம் அடைந்த ராணுவத்தினரின் வாரிசுகள், ஆதரவற்ற விதவைகள் , கலப்பு திருமண வாரிசுகள் உள்ளிட்ட வழக்கமான வரிசைப்படி வேலைவாய்ப்பு முன்னுரிமை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்