தொடர் மழை எதிரொலி: 400 ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன.
x
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 400 ஏக்கர் விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக கலவை, திமிரி, ஆற்காடு, நெமிலி, சோளிங்கர், அவலூர், அரக்கோணம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் ஆங்காங்கே மழை நீர் புகுந்து நெற்பயிர், உளுந்து, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உளியநல்லூர் கிராமத்தில் ஜாகீர் தண்டலம் ஏரியானது முழுமையாக நிரம்பி விளைநிலங்களை நீர் சூழ்ந்துள்ளது.  நெல், கத்திரி, வெண்டை  உட்பட 200 ஏக்கரில் பயிர்கள் வீணாகியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்