அரசு வாகனம் மீது நடனமாடியவர்கள் தலைமறைவு - முன் ஜாமின் கேட்டு உதவி பேராசிரியர் மனு

தேவர் குருபூஜையின் போது அரசு வாகனங்களில் மீது நடனமாடியது தொடர்பாக உதவி பேராசிரியரின் கல்லூரி வருகை பதிவேடுவை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு வாகனம் மீது நடனமாடியவர்கள் தலைமறைவு - முன் ஜாமின் கேட்டு உதவி பேராசிரியர் மனு
x
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்ற தேவர் குருபூஜையின் போது,  அரசு வாகனங்கள் மீது ஏறி நின்று சிலர் நடனம் ஆடினர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மண்டலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த 13 பேர் மீது  பல்வேறு பிரிவுகளில் கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல்துறையினர் தேடி வரும் பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் செந்தில்குமார், முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது அரசு வாகனங்களில் ஏறி நடனமாடியவர்களும், மனுதாரரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர் என்பதால் மனுதாரரை போலீசார் வழக்கில் சேர்த்துள்ளதாகவும் எனவே இந்த வழக்கிற்கு சம்பந்தம் இல்லாததால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கல்லூரி வருகை பதிவேடு மற்றும் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்