அறிவியல் திறனறிவு தேர்வு - வரும் ஆண்டு முதல் மாநில மொழிகளில் தேர்வு - நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

அறிவியல் திறனறிவு தேர்வு, அடுத்த ஆண்டு முதல் அந்தந்த மாநில மொழிகளில் நடைபெறும் என்று, மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
அறிவியல் திறனறிவு தேர்வு - வரும் ஆண்டு முதல் மாநில மொழிகளில் தேர்வு - நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
x
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா திட்டம் மூலம்,  அறிவியலில் ஆர்வமுள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறிவு தேர்வு நடத்தி, தகுதியானவர்களுக்கு ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில மொழிகளில் திறனறிவு தேர்வை நடத்துவதற்கான செயல்முறை 5-6 மாதங்கள் ஆகும் என்பதால், அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளிலும் திறனறிவு தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதியளிக்கபட்டது. இதுசம்பந்தமாக மனுவாக தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதிகள்,   விசாரணையை நவம்பர் 15ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்