வன்னியர் உள்இடஒதுக்கீடு சட்டம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
பதிவு : நவம்பர் 09, 2021, 09:41 PM
வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் இடஒதுக்கீடு பாகுபாட்டை உருவாக்கவில்லை என்றும், இந்த உள் இடஒதுக்கீட்டால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பிற சமூகங்கள் பாதிக்கப்படாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள் இடஒதுக்கீடு பாகுபாட்டை உருவாக்கவில்லை என்றும், இந்த உள் இடஒதுக்கீட்டால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பிற சமூகங்கள் பாதிக்கப்படாது என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து ஏப்ரல் மாதம் 4 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், 10.5% உள் இடஒதுக்கீடு சட்டத்தால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தரவுகளைக் கொண்டு, அரசியலமைப்பு சட்ட விதிகளின் படியே, 10.5% உள் இடஒதுக்கீடுக்கான சட்டமியற்றப்பட்டதாகவும்,

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை  வகைப்படுத்த,  மாநிலங்களுக்கு தடையில்லை என 'இந்திரா சாவ்னே' வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என வகைப்படுத்தப்பட்டவர்களில் சமமான சமூகநீதியை கிடைக்க செய்வதற்காக, வன்னியர் சமூகத்துக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாகவும்,

இந்த ஒதுக்கீட்டால் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள பிற சமூகங்கள் பாதிக்கப்படுவது என்பது கட்டுக் கதை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிரான ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.