ரூ.300 கோடி செலவில் ஒருங்கிணைந்த திட்டம் - செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஆலோசனை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 300 கோடி செலவில் ஒருங்கிணைந்த பெரும்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
x
சென்னை தலைமைச்செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச்செயலாளர் இறையன்பு, திமுக எம்.பி கனிமொழி, திருச்செந்தூர் கோயில் தர்கார் கண்ணன் ஆதித்தன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். 300 கோடி செலவில் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, தங்கும் விடுதிகள் மற்றும் அன்னதான கூடம், வாகன நிறுத்துமிடம், வியாபார கடைகள், எங்கு நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவுக்கு கட்டடம் கட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்