300அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - தாயுடன் கைக்குழந்தை உள்பட மூவர் பலி
பதிவு : நவம்பர் 06, 2021, 08:44 AM
கொடைக்கானல் அடுத்த அடுக்கம் மலைப்பாதையில், 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில், கைக்குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரை சமயநல்லூர் அடுத்த தேனூரைச் சேர்ந்த கோகுல் என்ற வழக்கறிஞர், மனைவி நந்தினி, மாமியார், குழந்தை மற்றும் கார்த்தி ஆகியோருடன் கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, மேற்குத் தொடர்ச்சி மலையில், அடுக்கம் பகுதியில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் 300 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து உருண்டுள்ளது. தகவலறிந்து வந்த தேனி மாவட்ட தீயணைப்புத் துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், கோகுல் மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ஆகிய இருவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு தேனியில் சிகிச்சையில் உள்ளனர். கோகுலின் மனைவி, மாமியார், கைக்குழந்தை மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிந்த பெரியகுளம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விவசாயிகளுக்கு பயிர் கா​ப்பீடு தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

6 லட்சம் விவசாயிகளுக்கு சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்புத் தொகை வழங்கும் பணியை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

133 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

46 views

கோவாக்சின் செலுத்தியோருக்கு ஆஸி. அனுமதி - தனிமைப்படுத்த தேவையில்லை என அறிவிப்பு

கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியவர்கள் தங்கள் நாட்டுக்கு வரலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு எந்தெந்த நாடுகள் அனுமதியை வழங்கியுள்ளன என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்....

43 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

25 views

மழை பாதிப்பு பகுதிகளில் நிவாரண பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்களை துவக்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

22 views

பிற செய்திகள்

"உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு அஞ்சலி" - காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி உயிரிழந்த 720 விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

6 views

வேளாண் சட்டம் வாபஸ்; பிரகாஷ்காரத் வரவேற்பு - விவசாயிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க நாள்

வேளாண் சட்டம் வாபஸ் இந்திய விவசாயிகள் போராட்ட வரலாற்றில் சிறப்பு மிக்க நாள் என்று,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.

9 views

நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி வருவதால், 35 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

12 views

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் மீண்டும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

6 views

"திங்கள் கிழமை மத்திய குழு வரும்"; "சேத விபரங்கள் சமர்ப்பிக்கப்படும்" - துணை நிலை ஆளுநர் தமிழிசை தகவல்

புதுச்சேரியில் பெய்த கனமழை வெள்ள சேதங்களை பார்வையிட வரும் திங்கள் கிழமை மத்திய குழு வர இருப்பதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர‌ராஜன் கூறியுள்ளார்.

3 views

"3 சட்டங்களை திரும்ப பெறும் நிலைக்கு மத்திய அரசு வரும்" - 10 மாதங்களுக்கு முன்னரே கூறிய ராகுல்காந்தி

விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என ராகுல்காந்தி 10 மாதங்களுக்கு முன்பு கூறிய கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.