அதிமுக உட்கட்சி தேர்தல் -விரைவில் அறிவிப்பு

டிசம்பர் 31ம் தேதிக்குள் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற வேண்டி உள்ள நிலையில், அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதிமுக உட்கட்சி தேர்தல் -விரைவில் அறிவிப்பு
x
அதிமுக பொதுக்குழு வருடத்திற்கு ஒரு முறையும், செயற்குழு இரண்டு முறையும் நடத்தப்பட வேண்டும். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. இதுத்தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கால அவகாசமும் கேட்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்,வருகின்ற டிசம்பர் 31ம் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்ட வேண்டும், அதற்கு முன்னதாக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வரக்கூடிய 10ம் தேதிக்கு பிறகு அதிமுகவின் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சசிகலாவிற்கு அதிமுகவில் இடமில்லை என்ற எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என கூறியதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமைக் அலுவலகம் வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது சசிகலா விவகாரத்தில் இதுவரை ஒருமித்த கருத்து எட்டப்படாத நிலையில் உட்கட்சித் தேர்தல் நடைபெற இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்