ரூ.102.94 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
பதிவு : அக்டோபர் 28, 2021, 01:57 PM
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  உயர்கல்வித்துறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு தொழில்நுட்பக் கல்லூரிகளில் புதிதாக வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், பல்நோக்குக் கூடம், கூட்டரங்கம், கழிவறைகள், விடுதிகள், பணியாளர் அறைகள், புத்தாக்க மையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. 102 கோடியே 94 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இக்கட்டடங்களை முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநர் லட்சுமி பிரியா மற்றும் பல அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.