பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்வு

சங்கராபுரம் பட்டாசுக்கடை விபத்தின் போது இடிபாடுகளில் சிக்கிய 11 வயது சிறுவன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 7-ஆக உயர்வு
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில், செவ்வாய்க்கிழமை மாலை திடீரென பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடை உரிமையாளரின் தாயார், அருகில் கடை நடத்தியவர்கள், டீ குடிக்க வந்தவர்கள் என 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 6ஆனது.

விபத்தின்போது, இரண்டு கட்டடங்கள் இடிந்து தரை மட்டமான நிலையில், இதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்ற 11 வயது சிறுவன் இடிபாடுகளுக்குள் சிக்கினார். பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் சிறுவனை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று சிறுவன் தனபாலின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதன் மூலம், சங்கராபுரம் பட்டாசுக்கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. உறவினர்களான பிரபு மற்றும் முருகனிடம் பேசினோம்.

இதனிடையே, சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. களத்தில் இருந்து செய்தியாளர் மதியழகன் தரும் கூடுதல் தகவல் இது.

Next Story

மேலும் செய்திகள்