அரசியல் பயணத்தை தொடங்கிய சசிகலா - அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு

சசிகலா இன்று முதல் ஒரு வாரத்திற்கான தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.
x
சசிகலா இன்று முதல் ஒரு வாரத்திற்கான தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளது தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை பற்றவைத்திருக்கிறது.

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அறிவித்த சசிகலா, அண்மையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார். 

அப்போது, அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்ததாக தெரிவித்தார். பின்னர், அதிமுக பொன்விழா நாளில் எம்.ஜி.ஆரின் ராமாவரம் இல்லத்திற்கு சென்றார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. 

இந்த சூழலில், இன்று முதல் ஒரு வாரத்திற்கு அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்கி இருக்கிறார். சென்னையில் இருந்து தஞ்சை புறப்பட்ட சசிகலா, புதன்கிழமை நடைபெறும் தினகரனின் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்கிறார். 

இதைத்தொடர்ந்து 28ஆம் தேதி மதுரையில் ஆதரவாளர்களை சந்திக்கும் சசிகலா, 30ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் குருபூஜையில் கலந்து கொள்கிறார். 

பின்னர், மீண்டும் தஞ்சை திரும்பும் சசிகலா, ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பயணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. 



Next Story

மேலும் செய்திகள்