குடிபோதைக்கு அடிமையான கணவனால் விரக்தி - தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மனைவி
பதிவு : அக்டோபர் 22, 2021, 01:38 PM
அளவு கடந்த மதுப்பழக்கம் இரண்டு உயிர்களை காவு வாங்கியிருக்கிறது... இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி. 30 வயதான இவர், டிப்பர் லாரி வைத்துள்ளதோடு ஓட்டுநராகவும் இருந்து வந்தார். இவர் அரியாம்பாளையத்தை சேர்ந்த பிரியா என்ற பெண்ணை கடந்த 15 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். 

கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட கார்த்தி, அடிக்கடி நண்பர்களோடு சேர்ந்து மது அருந்துவதும் கிரிக்கெட் விளையாடுவதுமாக இருந்துள்ளார். கார்த்திக்கின் அளவு கடந்த மதுப்பழக்கம் காரணமாக அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. 

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற கார்த்தி இரவு முழுவதும் வீடு திரும்பாமல் அடுத்த நாள் போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்த பிரியா கணவரிடம் கேள்வி கேட்கவே, இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 

அப்போது தகாத வார்த்தைகளால் கார்த்தி பேசியதால் விரக்தியடைந்த பிரியா, தன் வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். போதை தெளிந்து எழுந்த கார்த்தி, தன் மனைவியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனால் பயந்து போன அவர்,  மதுபாட்டிலை உடைத்து தன் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் உடனடியாக இறந்து விட வேண்டும் என நினைத்த அவர், ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

கணவன், மனைவி என 2 பேரின் சடலங்களை கைப்பற்றிய போலீசார்,  விசாரணை நடத்தி வருகின்றனர். அதீத குடிப்பழக்கம் பல கனவுகளோடு வாழ்க்கையை துவங்க இருந்த 2 பேரின் உயிரை காவு வாங்கியிருக்கிறது...

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் கனமழை எதிரொலி - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

136 views

காதலியைக் கரம் பிடித்த க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் - 2 வருடக் காதல் கை கூடியது

"ட்வைலைட்" படப் புகழ் அமெரிக்க நடிகை க்ரிஸ்டன் ஸ்டுவர்ட் தனது நீண்ட நாள் காதலியான டிலன் மெயரைக் கரம் பிடித்தார்.

77 views

விராட் கோலிக்கு இன்று பிறந்த நாள் - "ரன் மெஷின்"-க்கு வயது 33...

ரன் மெஷின் என்று அன்போடு அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

68 views

இந்தியாவில் 10 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்கள் - அட்டவணையை வெளியிட்ட ஐசிசி

2031ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐசிசி தொடர்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

43 views

ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்ததை தொடர்ந்து, காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

37 views

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் - சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி, சட்டமன்ற உறுப்பினர் வேல் முருகன் தலைமையில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

23 views

பிற செய்திகள்

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (04/12/2021) | Headlines | Thanthi TV

18 views

"தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை" - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னையில் தொற்று பாதித்த இருவருக்கும் ஒமிக்ரான் இல்லை என்று தெரியவந்துள்ளது.

83 views

புதுச்சேரியில் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் வரும் 6ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

31 views

மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்

மீண்டு வந்தார் ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டு உருக்குலைந்த சிறுமி - நிதியுதவி வழங்கிய முதல்வர்

17 views

(03/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

(03/12/2021) இரவு 9 மணி தலைப்புச் செய்திகள்

28 views

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

"விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட தங்கம்?""தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின"

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.